மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்


மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும்
x
தினத்தந்தி 23 May 2021 12:50 AM IST (Updated: 23 May 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மண்டலத்தில் மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

விருதுநகர், 
தமிழக அரசு நாளை முதல் முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் நேற்று மாலை முதல் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது. அந்த வகையில் நேற்று விருதுநகர் மண்டல போக்குவரத்து கழகம் மாவட்டம் முழுவதும் 20 டவுன் பஸ்கள் மற்றும் 15 புறநகர் பஸ்கள் ஆக மொத்தம் 35 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இன்றும் தேவையின் அடிப்படையில் பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மண்டலத்தில் 180 புறநகர் பஸ்களும், 237 டவுன் பஸ்களும் ஆக மொத்தம் 417 பஸ்கள் உள்ள நிலையில் இன்று பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் அவர்களுக்கு சிரமம் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இன்று நள்ளிரவு வரை மக்களின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டதோடு கடைசி பஸ் என வரையறுக்காமல் மக்களின் வசதிக்கேற்ப பஸ்கள் இயக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

Next Story