கிருமிநாசினி தெளிப்பு
வத்திராயிருப்பு பேரூராட்சி சார்பில் நகரில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு பேரூராட்சி சார்பில் நகரில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. வத்திராயிருப்பு பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமையில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ராமச்சந்திரன், பணியாளர்கள் மகேந்திரன், கனகராஜ் உள்ளிட்ட பேரூராட்சி குழுவினர், தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிருமிநாசினி மருந்தினை தீயணைப்பு வாகனம் மூலம் தெளித்தனர். முத்தாலம்மன் திடலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை உள்பட முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சி சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story