புகையிலை விற்ற 5 பேர் கைது
சாத்தூர் பகுதியில் புகையிலை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செய்யது இப்ராகிம், கிருஷ்ணசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தூர் காமராஜபுரம் 2-வது தெருவில் உள்ள மளிகை கடையில் வைத்து புகையிலை விற்ற சத்தியமூர்த்தி (வயது 50) என்பவரிடம் போலீசார் 36 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர். அதேபோல மேல ஒட்டம்பட்டி பெட்டிக்கடையில் புகையிலை விற்ற ராமச்சந்திரன் (54) என்பவரிடம் இருந்து 33 பாக்கெட் புகையிலையும், கோபாலபுரத்தில் பெட்டிக்கடையில் வைத்து புகையிலை விற்ற சங்கரப்பன் (38) என்பவரிடம் இருந்து 36 பாக்கெட் புகையிலையையும், அழகாபுரி கிராமத்தில் பெட்டிகடையில் வைத்து புகையிலை விற்ற கண்ணன் (46) என்பவரிடம் இருந்த 36 பாக்கெட் புகையிலையையும், ரெங்கப்பநாயக்கன்பட்டி காலனியில் உள்ள பெட்டிகடையில் வைத்து புகையிலை விற்ற சுந்தரபாண்டி (32) என்பவரிடம் 41 பாக்கெட் புகையிலையையும் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story