கடைகளுக்கு “சீல்”


கடைகளுக்கு “சீல்”
x
தினத்தந்தி 23 May 2021 12:51 AM IST (Updated: 23 May 2021 12:51 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்ேகாட்டையில் ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை, 
கொரோனா பரவலை தடுக்க அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி, மளிகை, மருந்து கடைகளுக்கு மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் திறக்க அனுமதி இல்லை. இந்நிலையில் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் தாசில்தார் ரவிச்சந்திரன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பாளையம்பட்டி, புதிய பஸ் நிலையம் பகுதிகளில் விதிகளை மீறி செயல்பட்ட 2 சலூன் கடைகளையும், தடைசெய்யப்பட்ட பகுதியில் மீன் வியாபாரம் செய்த கடை உள்ளிட்ட 3 கடைகளுக்கு வருவாய்த்துறையினர்  “சீல்” வைத்தனர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story