கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அரியலூர்:
2 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரியலூர் நகராட்சி பகுதியில் 21 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 20 பேரும், அரியலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 43 பேரும், திருமானூர், செந்துறை ஆகிய ஒன்றிய பகுதிகளில் தலா 34 பேரும், தா.பழூர் ஒன்றிய பகுதியில் 23 பேரும், ஆண்டிமடம் ஒன்றிய பகுதியில் 52 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதியில் 48 பேரும் என மொத்தம் 275 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9,034 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 64 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய பெண்ணும், 80 வயதுடைய முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 7,018 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சையில் 1,950 பேர்
தற்போது 1,950 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த மொத்தம் 57 பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,128 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று 454 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 130 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 584 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story