விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தி.மு.க.வினர் ஆறுதல்


விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தி.மு.க.வினர் ஆறுதல்
x
தினத்தந்தி 23 May 2021 1:50 AM IST (Updated: 23 May 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

மாஞ்சோலை மலைப்பாதையில் லாரி கவிழந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தி.மு.க.வினர் ஆறுதல் கூறினர்.

அம்பை, மே:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் உள்ள கோதையாறு பகுதியில் மின்கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்ததும் லாரியில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது மாஞ்சோலையை அடுத்த முணுமுடங்கி பகுதியில் லாரி கவிழ்ந்ததில் பூதப்பாண்டி, பொன்னுத்துரை ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயமடைந்த 10 பேர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும், 18 பேர் அம்பை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் நேற்று மதியம் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் பரணி சேகர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாஞ்சோலை மைக்கேல், நகர துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, இளைஞரணி தினகரன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story