புளியங்குடியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்- கலெக்டர் சமீரன் தொடங்கி வைக்கிறார்


புளியங்குடியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்- கலெக்டர் சமீரன் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 23 May 2021 2:02 AM IST (Updated: 23 May 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதனை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைக்கிறார்.

தென்காசி, மே:
தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என். புதுக்குடியில் உள்ள ஆர்.சி. சர்ச் வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைக்கிறார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் முன்னிலை வகிக்கிறார். பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பண ராஜவேல் தெரிவித்தார்.

Next Story