பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி; பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார்


பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி; பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 23 May 2021 2:20 AM IST (Updated: 23 May 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை, பழனி நாடார் எம்.எல்.ஏ. வழங்கினார்

பாவூர்சத்திரம், மே:
தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம் பஞ்சாயத்து திரவியநகரில் நடைபெற்றது. பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பொது மக்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதியை வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, சுரண்டை பஸ் நிலையம் மற்றும் காமராஜர் வணிக வளாகம் முன்பு ஆகிய இடங்களில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால், நிர்வாகி பால் என்ற சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தென்காசி கீழ ரத வீதியில் உள்ள காந்தி சிலை முன்பு அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினர். நகர தலைவர் காதர் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அம்பையில் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இலவச முககவசம் வழங்கினர். 

அம்பை யூனியன் வாகைகுளத்தில் வட்டார காங்கிரஸ் துணை தலைவர் காளைசாமி தலைமையில் பொதுமக்களுக்கு இலவச முக கவசம் வழங்கப்பட்டது.

Next Story