தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலி


தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலி
x
தினத்தந்தி 23 May 2021 2:30 AM IST (Updated: 23 May 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலியானார்கள்.

தென்காசி, மே:
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் பலியானார்கள். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 27 வயது வாலிபர், 38 வயது, 54 வயது, 55 வயது ஆண்கள், 46 வயதில் 2 பெண்கள், 59 வயது பெண், நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 80 வயது முதியவர் உள்பட மொத்தம் 9 பேர் பலியானார்கள். இதனால் மாவட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 260-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று 553 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 2-ஆக உயர்ந்துள்ளது. 15 ஆயிரத்து 29 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 3 ஆயிரத்து 713 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story