சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பெண்கள் உள்பட 18 பேர் பலி-மேலும் 742 பேருக்கு தொற்று உறுதி


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பெண்கள் உள்பட 18 பேர் பலி-மேலும் 742 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 23 May 2021 3:08 AM IST (Updated: 23 May 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பெண்கள் உள்பட 18 பேர் பலியானார்கள். மேலும் புதிதாக 742 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 7 பெண்கள் உள்பட 18 பேர் பலியானார்கள். மேலும் புதிதாக 742 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
742 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 725 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 742 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 313 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஓமலூரில் 60 பேர், சேலம் ஒன்றியத்தில் 51 பேர், ஆத்தூரில் 43 பேர், வீரபாண்டியில் 38 பேர், சங்ககிரியில் 35 பேர், எடப்பாடியில் 27 பேர், பனமரத்துப்பட்டியில் 25 பேர், வாழப்பாடியில் 23 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 20 பேர், தாரமங்கலத்தில் 18 பேர், நங்கவள்ளியில் 14 பேர், மகுடஞ்சாவடியில் 13 பேர், மேட்டூர், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 12 பேர், பெத்தநாயக்கன்பாளையம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், கொங்கணாபுரம், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், காடையாம்பட்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், கொளத்தூர், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
56 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 42 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 361 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 5 ஆயிரத்து 601 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 130-க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
18 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 7 பெண்கள் உள்பட 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி, மேட்டூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 758 ஆக அதிகரித்துள்ளது.

Next Story