பெருந்துறையில் புதிய படுக்கைகளுடன் தயாராகும் கொரோனா சிகிச்சை மையம்- அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார்
பெருந்துறையில் புதிய படுக்கைகளுடன் தயாராகும் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டார்.
ஈரோடு,
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் வார்டுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆக்சிஜன் வசதியுடன் சுமார் 700 கூடுதல் படுக்கைகளுடன் 2 வார்டுகளாக இந்த புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது. தனியார் நிறுவன தொழில் அதிபர்கள் நிதி உதவி மற்றும் ரோட்டரி சங்க உதவியுடன் இந்த பணிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு வார்டுக்கான கட்டமைப்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்து வருகின்றன. இங்கு புதிய கட்டில்கள் மற்றும் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று பார்வையிட்டார்.
அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
இதுபோல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொண்டு வரும் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் மருத்துவ பணிகள் குறித்தும் அமைச்சர் சு.முத்துசாமி கல்லூரி முதல்வர் டாக்டர் மணி மற்றும் மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
Related Tags :
Next Story