கிணத்துக்கடவில் கடைகள் முன்பு வட்டம் வரையும் பணி


கிணத்துக்கடவில் கடைகள் முன்பு வட்டம் வரையும் பணி
x
தினத்தந்தி 23 May 2021 5:31 AM IST (Updated: 23 May 2021 5:32 AM IST)
t-max-icont-min-icon

சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தி கிணத்துக்கடவில் கடைகள் முன்பு வட்டம் வரையும் பணி நடைபெற்றது.

கிணத்துக்கடவு,

கொரோனா பரவல் 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கிராம புறங்களில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனைத்தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, பொது இடங்களில் சமூக இடைவெளியே கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரதுறையினர் அறிவிவுறுத்தினர்.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கிணத்துக்கடவு பேரூராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி தற்போது கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடை முன்பு சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் நிற்பதற்கு வசதியாக பேரூராட்சி பணியாளர்கள் வட்டம் வரையும் பணியில் ஈடுபட்டனர். 

கடைக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story