அரூரில் ஊரடங்கை மீறி திறந்த பாத்திரக்கடைக்கு சீல்
அரூரில் ஊரடங்கை மீறி திறந்த பாத்திரக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
அரூர்,
கொரோனா 2-வது அலை அதிகரிப்பால் தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் ஊரடங்கின்போது காலை 10 மணிக்கு மேல் இயங்கும் கடைகளை போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அரூரில், சேலம் பைபாஸ் சாலையில் பாத்திரக்கடை ஒன்று திறந்து விற்பனை நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் பேரில் வருவாய் உதவி கலெக்டர் முத்தையன் மற்றும் அரூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஊரடங்கை மீறி திறந்த பாத்திரக்கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story