காஞ்சீபுரத்தில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாமை நகராட்சி ஆணையர் ஆய்வு

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாமை நகராட்சி ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 23 May 2021 8:18 AM IST (Updated: 23 May 2021 8:18 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் நகரில் சின்னகாஞ்சீபுரம், திருமுக்கூடல், அன்னை சத்யா நகர் போன்ற பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெற்றது. சின்ன காஞ்சீபுரத்தில் நடைபெற்ற கொரோனா பரிசோதனை முகாமை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சீபுரம்,

அதன் பின்னர் அவர் இது குறித்து பேசுகையில்:-

காஞ்சீபுரம் நகரில் உள்ள 51 வார்டுகளிலும் சுழற்சி முறையில் 106 பணியாளர்களை கொண்டு தினந்தோறும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகிறது.

வீடு, வீடாக சென்று தினந்தோறும் 15 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அவர்கள் உடல்நிலைக்கேற்ப கண்காணித்து தேவைப்படுவோருக்கு மருத்துவ சிகிச்சையும் அளித்து வருகிறோம். நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் சிறப்பு கொரோனா பரிசோதனை முகாம்களும் நடத்துகிறோம். தினந்தோறும் 2 ஆயிரம் பேரிடம் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதுவரை 2 லட்சத்து 57 ஆயிரத்து 487 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களை தொடர்ந்து கண்காணித்து தேவையான மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறோம்.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தோடு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறியதாக இதுவரை 17 லட்சத்து 48 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story