குறைந்த மின்அழுத்த குறைபாட்டால் பொதுமக்கள் அவதி: பேரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை
பேரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் துணை மின்நிலையத்தில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து பேரம்பாக்கம், களாம்பாக்கம், சின்னமண்டலி, சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, மப்பேடு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த துணை மின் நிலையத்தில் இருந்து வழங்கப்படும் மின்சாரமானது, சீராக இல்லாமல் குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் வழங்கப்படுகிறது. மேலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
இதனால் விவசாயிகள் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இது குறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனிடம் புகார் அளித்தனர்.
‘திடீர்’ ஆய்வு
பொதுமக்கள் புகாரை தொடர்ந்து, நேற்று திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் பேரம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யவும், குறைந்த மின்னழுத்த மின்சாரத்தை போக்கி சீரான மின்சாரம் வினியோகம் செய்ய புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தடையின்றி மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அவருடன் தி.மு.க. மாநில விவசாய பிரிவு நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேஷன், களாம்பாக்கம் பன்னீர்செல்வம், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ், பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சுயம்பிரகாஷ், மாவட்ட குழு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரஸ்வதி ரமேஷ், மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story