மாவட்ட செய்திகள்

லெட்சுமாங்குடியில் வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு + "||" + Will the white lotus plants occupying the white water in Letsumangudi be removed? Public expectation

லெட்சுமாங்குடியில் வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

லெட்சுமாங்குடியில் வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
லெட்சுமாங்குடியில் வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி பாலம் அருகே வெண்ணாறு உள்ளது. இந்த ஆற்றில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் கோடைக்காலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் மாசு படர்ந்த தண்ணீராக மாறி உள்ளது. மேலும் செடிகள் அதிகளவில் இருப்பதால் தேங்கி நிற்கும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுகிறது. ஆகாய தாமரை செடிகள் சில அழுகி போய் இருப்பதால் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அருகே வீடுகளில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம்

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆகாய தாமரை செடிகள் குறிப்பிட்ட இடங்களில் வெண்ணாற்றில் தேங்கி கிடப்பது வாடிக்கையாக உள்ளதாகவும், இதனால் ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது ஆகாய தாமரை செடிகள் தண்ணீரை கடைமடை பகுதி வரை முழுமையாக செல்லாதவாறு தடுத்து நிற்பதாகவும், இதனால் விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீரை கொண்டு செல்வதில் கூட சிரமம் அடைவதாகவும் அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பே வெண்ணாற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உரிய கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்: மத்திய அரசு
அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதி உள்ளார்.
2. முகலிவாக்கத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் உண்ணாவிரதம்
முகலிவாக்கத்தில் குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பொதுமக்களிடம் இன்று நேரடியாக மனுக்களை பெறுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் இன்று நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
4. ஊரடங்கில் பொருட்கள் வாங்க ரேஷன் கடையில் கூடிய பொதுமக்கள் கடை திறக்காததால் ஏமாற்றம்
ஊரடங்கில் பொருட்கள் வாங்க ரேஷன் கடையில் பொதுமக்கள் கூடினர்.
5. நாகுடி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
நாகுடி மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.