வேலூர் மாவட்டத்தில் 544 பேருக்கு கொரோனா பாதிப்பு


வேலூர் மாவட்டத்தில் 544 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 23 May 2021 5:02 PM IST (Updated: 23 May 2021 5:02 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் மேலும் 544 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர்

544 பேருக்கு தொற்று

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
 
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 595 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் மேலும் 544 பேருக்கு தொற்று உறுதியானது. வேலூர் மாநகராட்சி பகுதியில் சுமார் 300 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

3,880 பேர் சிகிச்சையில் உள்ளனர் 

கிராமப்புற பகுதிகளில் தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 544 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட் டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 38 ஆயிரத்து 161 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 ஆயிரத்து 680 பேர் குணமடைந்துள்ளனர். 601 பேர் உயிரிழந்தனர். 3,880 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story