கோவில்பட்டியில் விபத்தில் சிக்கி வியாபாரி பலி


கோவில்பட்டியில் விபத்தில் சிக்கி வியாபாரி பலி
x
தினத்தந்தி 23 May 2021 6:24 PM IST (Updated: 23 May 2021 6:24 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் விபத்தில் சிக்கி வியாபாரி பலியானார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் வியாபாரத்துக்கு காய்கறி வாங்க மொபட்டில் சென்ற வியாபாரி விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.
காய்கறி வியாபாரி
கோவில்பட்டியை அடுத்துள்ள நாலாட்டின்புத்தூர் நடு தெருவை சேர்ந்த கரியமால் மகன் ரெங்கராஜ் (வயது 55). காய்கறி வியாபாரி. இவர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கி, விற்று வந்தார். இவர் நேற்று அதிகாலை 5-30 மணி யளவில் தனது மொபட்டில் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க சென்று கொண்டிருந்தார். 
வாகனம் மோதியது
இனாம் மணியாச்சி மேம்பாலத்தில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக பலியானார்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி ரெங்க ராஜ் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான ரெங்கராஜூக்கு முனிய செல்வி (50) என்ற மனைவியும், கிருஷ்ண வேணி (23) என்ற மகளும், நந்த கோபால் (21), சந்திர பாரதி ( 19) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

Next Story