பள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்
பள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் யூனியன் பள்ளக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி மணிநகரில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம், சுண்டங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, பிச்சிவிளை டி.டிடி.ஏ. தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த முகாமை பஞ்சாயத்து தலைவர் சித்ராங்கதன் முன்னிலையில், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தாசில்தார்கள் செல்வகுமார், செந்தூர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், தனலெட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் ஐலின் சுமதி, டாக்டர் பிரியங்கா, சுகாதார ஆய்வாளர் மந்திரராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், நயினார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, சாயர்புரம் மெயின் பஜாரில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இலவச முக கவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இதேபோன்று விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்புள்ள ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலைக்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் வழங்கினர். காமராஜர் நற்பணி மன்ற தலைவர் மேடை சேர்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story