கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் கம்பத்தில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்


கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் கம்பத்தில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 23 May 2021 6:37 PM IST (Updated: 23 May 2021 6:37 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் கம்பத்தில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.


கம்பம்:
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கின்போது உழவர் சந்தை, மளிகை கடைகள் செயல்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
இதனால் பொருட்கள் வாங்க நேற்று கம்பம் உழவர் சந்தை, பார்க் சாலையில் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதுபோல ஓடைக்கரைத் தெரு, புதுப்பள்ளிவாசல் தெரு, வ.உ.சி.திடல் போன்ற இடங்களில் இறைச்சி வாங்க சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டமாக குவிந்தனர். மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடைகளில் கம்பம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த சில்லரை வியாபாரிகள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் அரசமரம், வேலப்பர் கோவில் வீதி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி தெரு, காந்தி வீதி போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆட்டோ உதிரிபாக விற்பனை கடைகள், சலூன்கடைகள், பேக்கரி கடைகள், ஜவுளி கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் சமூக இடைவெளியின்றி பொருட்கள் வாங்கியதால் மேலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.



Next Story