தூத்துக்குடி பஸ்நிலையத்தில் தற்காலிக மார்க்கெட்டால் கூட்ட நெரிசல்


தூத்துக்குடி பஸ்நிலையத்தில் தற்காலிக மார்க்கெட்டால் கூட்ட நெரிசல்
x
தினத்தந்தி 23 May 2021 6:59 PM IST (Updated: 23 May 2021 6:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பஸ்நிலையத்தில் இயங்கிய தற்காலிக மார்க்கெட்டால் கூட்ட நெரிசல் காணப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், காய்கறி கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பஸ் நிலையத்துக்குள் மாற்றப்பட்டு இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் தமிழக அரசு நேற்று அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவித்தது. அதன்படி தூத்துக்குடியில் இருந்து நெல்லை, திருச்செந்தூர், ஏரல், கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதுபோல கோவை, சென்னை போன்ற நீண்ட தொலைவு பஸ்களும் நேற்று இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
கூட்ட நெரிசல்
மேலும் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் முழுவதும் ஏற்கனவே தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக மாற்றப்பட்டுள்ள நிலையில் நேற்று பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதனால் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் நிறுத்தப்பட்டன. பஸ்களுக்கு இடையே காய்கறி கடைகளும் செயல்பட்டன. இதனால் பஸ்களில் பயணிக்க வந்தவர்கள், காய்கறி வாங்க வந்தவர்கள் என கூட்டம் கடுமையாக காணப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட்டு முறையான ஏற்பாடுகள் செய்யாததால் புதிய பஸ் நிலைய பகுதியில் நேற்று கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Next Story