திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 1,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 763 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி 11 பேர் பலியாகினர்.

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 1,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  763 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  சிகிச்சை பலனின்றி 11 பேர் பலியாகினர்.
x
தினத்தந்தி 23 May 2021 9:17 PM IST (Updated: 23 May 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 1,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 763 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி 11 பேர் பலியாகினர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 1,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  763 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  சிகிச்சை பலனின்றி 11 பேர் பலியாகினர்.
1,446 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நகர்புறங்களில் முதலில் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது கிராமப்புற பகுதிகளிலும் பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவது அனைவரையும் அச்சமடைய செய்துள்ளது. 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வரும் வரை இவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
46 ஆயிரத்து 927-ஆக உயர்வு
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 927-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 763 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
 இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 89-ஆக உள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 ஆயிரத்து 504 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
11 பேர் பலி
இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 11 பேர் பலியாகியுள்ளனர். திருப்பூரை சேர்ந்த 39 வயது ஆண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 52 வயது ஆண் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 59 வயது ஆண் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 57, 52 வயது பெண் மற்றும் 46 வயது ஆண் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் என மாவட்ட முழுவதும் 11 பேர் பலியானதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.தற்போது பலி எண்ணிக்கை 334-ஆக உயர்ந்துள்ளது. 

Next Story