குன்னத்தூர் சந்தைப்பேட்டையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திடீர் மளிகை கடைகள்
குன்னத்தூர் சந்தைப்பேட்டையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திடீர் மளிகை கடைகள்
குன்னத்தூர்
தமிழக அரசு இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வு இல்லாத ஊரடங்கை அறிவித்தது. இதனால் நேற்றும் அதற்கு முந்திய நாளும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் இரவு 9 மணி வரை திறந்து வைத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இதை பயன்படுத்தி வியாபாரிகள் குன்னத்தூர் சந்தைப்பேட்டையில் வாரச்சந்தை போல் திடீர் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை அடுக்கி வைத்தனர். இத்தகைய கடைகளுக்கு இப்பகுதி பொதுமக்கள் எந்தவிதமான சமூக இடைவெளி இல்லாமல் குவிந்தனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அனைத்துப் பொருள்களும் காலையில் ஒரு விலையும் நேரம் ஆக ஆக மாலையில் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது. காலையில் (ஒரு கிலோ) தக்காளி ரூ.10-க்கும் முட்டைகோஸ் ரூ.10-க்கும் விற்றது நேரம் ஆக ஆக கிலோ ரூ.20 ரூ.30 வரை என ஆனது. அரசும் ஊரடங்கு காலங்களில் காய்கறிகள் தனித்தனி வேன்களில் அவரவர் வீடு தேடி வரும் என அறிவித்தும் இவ்வாறு பொதுமக்கள் ஒன்று கூடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story