தாராபுரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளால் போக்குவரத்து நெரிசல்
தாராபுரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளால் போக்குவரத்து நெரிசல்
தாராபுரம்
தமிழகத்தில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு நாளை முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் தமிழக அரசு திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மளிகை உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்க தாராபுரம் முக்கிய வீதியான பெரிய கடைவீதி, சின்னக்கடை வீதி, பூக்கடை கார்னர், என்.என் பேட்டை, அண்ணா நகர், பொள்ளாச்சி ரோடு ஆகிய வீதியில் மக்கள் இன்று குவிந்தனர். ஒரே நேரத்தில் மக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது மேலும் பலர் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வீதிகளில் உலா வந்தனர்.
இதைப்பார்த்த போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர் உழவர் சந்தையில் 3 விவசாயிகள் மட்டும் வந்ததால் அங்கு வியாபாரம் மந்தமாக இருந்தது. இருப்பினும் கிராமப்புற மளிகை கடைக்காரர்கள் மொத்தமாக காய்கறிகளை வாங்கிச்சென்றனர். மேலும் அண்ணாநகர் பகுதியில் தற்காலிகமாக இயங்கி வரும் தினசரி மார்க்கெட்டில் ஏராளமான மக்கள் காலை முதல் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கிச்சென்றனர். அதேபோன்று உடுமலை சாலையில் உள்ள இறைச்சிக்கடை, மீன் கடை கடைகளில் பொதுமக்கள் அதிகம் காணப்பட்டனர். தாராபுரத்தில் குறைந்த பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டதால் வெளியூர் செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிறப்பு பஸ்கள் மூலம் வெளியூர் சென்றனர்.
Related Tags :
Next Story