உடுமலை உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு வந்த பொதுமக்கள் கூட்டம் 2 மடங்கானதால் 29 டன் காய்கறிகள் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.
உடுமலை உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு வந்த பொதுமக்கள் கூட்டம் 2 மடங்கானதால் 29 டன் காய்கறிகள் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.
உடுமலை
உடுமலை உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு வந்த பொதுமக்கள் கூட்டம் 2 மடங்கானதால் 29 டன் காய்கறிகள் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்தன.
உழவர்சந்தை
உடுமலை கபூர்கான் வீதியில் உழவர்சந்தைஉள்ளது.இந்த உழவர்சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதலே உடுமலை உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சில காய்கறிகளின் விலைநேற்று முன்தினம் விற்கப்பட்டதைவிட நேற்றுகூடுதலாக இருந்த நிலையிலும், பொதுமக்கள் சமூக இடைவெளியில்லாமல் நெருக்கமாக நின்று காய்கறிகளை வாங்கி சென்றனர்.
நேற்று முன்தினம் ஒரு கிலோரூ. 35 முதல் ரூ.40 வரை விற்ற கேரட் நேற்று ரூ.60-க்கு விற்றது. இதேபோன்று ரூ.70 முதல் ரூ.80 வரை விற்ற பீன்ஸ் நேற்று ரூ.100 முதல் ரூ.105 வரை விற்றது. ரூ.45-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.50-க்கும், ரூ.50-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.60-க்கும், ரூ.25-க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.38-க்கும் விற்கப்பட்டது.
இதேபோன்று மேலும் சில காய்கறிகளின் விலை நேற்று முன்தினத்தை விட நேற்று அதிகமாக இருந்தது.விலை கூடுதலாக இருந்தநிலையிலும் விற்பனை குறையவில்லை.உடுமலை உழவர்சந்தையில் காலை 8 மணிக்கு காய்கறிகள் விற்று தீர்ந்தன.
29 டன் காய்கறிகள்
நேற்று இந்த உழவர்சந்தையில் 29 டன் காய்கறிகள் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்துள்ளன. இந்த காய்கறிகளை பொதுமக்கள் சுமார் 4ஆயிரத்து 500 பேர் வாங்கி பயனடைந்தனர். இதுதினசரி வரும் பொதுமக்கள் கூட்டத்தை விட 2 மடங்காகும். உழவர் சந்தையில் காய்கறிகள் விற்று தீர்ந்ததைத்தொடர்ந்து பொதுமக்கள், உழவர் சந்தைக்கு வெளியே வியாபரிகள் வைத்திருந்த கடைகளுக்கு சென்று, அங்கு காய்கறிகளை வாங்கி சென்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இந்த உழவர்சந்தைக்கு வெளிப்பகுதியில் கபூர்கான் வீதி மற்றும் ஆசாத் வீதி ஆகிய இடங்களில் சாலையோர வியாபாரிகள், எப்போதும்உழவர்சந்தை செயல்படும் நேரம்வரை, திறந்த வெளியில் காய்கறிகடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். அதேபோன்று நேற்றும் காய்கறிகடைகளை வைத்திருந்தனர்.தள்ளுவண்டிகளிலும் வியாபாரம் நடந்தது.உழவர்சந்தைக்கு காய்கறிகளை வாங்குவதற்கு வந்த பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலைப்பகுதியில் நிறுத்தியிருந்தனர். சாலைப் பகுதியை, வியாபாரிகளின் சாலையோர காய்கறிக்கடைகள் மற்றும் பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள்ஆக்கிரமித்திருந்த நிலையில் கபூர்கான் வீதியில் கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட மற்ற வாகனங்கள் வந்தபோது அடிக்கடிபோக்குவரத்துநெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story