கூத்தாநல்லூரில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா
கூத்தாநல்லூரில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கூத்தாநல்லூர்:-
கூத்தாநல்லூரில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2-வது அலை வீரியம்
கொரோனா 2-வது அலை வீரியம் அதிகரித்து வருவதால், கொரோனா நோய் தொற்று பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சுகாதார பணிகள்
கடந்த 5 மாதங்களில் கூத்தாநல்லூரில் மட்டும் கொரோனா தொற்றால் 156பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 3 பேர் உயிரிழந்தனர். கூத்தாநல்லூர் பகுதியில் நேற்று மட்டும் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களில் கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.
Related Tags :
Next Story