திருப்பூர் மாநகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.
x
தினத்தந்தி 23 May 2021 10:09 PM IST (Updated: 23 May 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.

திருப்பூர்
திருப்பூர் மாநகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். 
அமைச்சர் ஆய்வு
திருப்பூர் வேலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  வேலம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 
கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் தமிழக அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள் 
இதனைத்தொடர்ந்து திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையம், திருப்பூர் குமரன் மகளிர் கலைக்கல்லூரியில் 300 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையம் மற்றும் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்த கொரோனா சிகிச்சை மையத்தினையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில்  கலெக்டர் விஜயகார்த்திகேயன், சுப்பராயன் எம்.பி.,  செல்வராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) சாந்தி, துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) ஜெகதீஸ்குமார், ஆர்.டி.ஓ. ஜெகநாதன், மாநகர் நல அதிகாரி பிரதீப் வாசுதேவ் கிருஷ்ணகுமார், தாசில்தார் ஜெகநாதன் தி.மு.க. திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜ், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story