சின்னசேலம் பகுதியில் சாராயம் விற்பனை கணவன் மனைவி உள்பட 7 பேர் கைது


சின்னசேலம் பகுதியில் சாராயம் விற்பனை  கணவன் மனைவி உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 23 May 2021 10:54 PM IST (Updated: 23 May 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் பகுதியில் சாராயம் விற்பனை கணவன் மனைவி உள்பட 7 பேர் கைது

சின்னசேலம்

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மேற்பார்வையில் சின்ன சேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, தனிப்பிரிவு போலீஸ்காரர் ஏழுமலை மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் சின்னசேலம் அருகே உள்ள தென்செட்டியந்தல், நாககுப்பம், பாண்டியன் குப்பம், மறவாநத்தம், கள்ளாநத்தம், காட்டா நந்தல், ஆகிய கிராமங்களில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்ற கள்ளக்குறிச்சியை அடுத்த ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் அழகேசன்(வயது 32), நாககுப்பம் கிராமம் ராமச்சந்திரன்(48), சின்னதுரை(48), பாண்டியன்குப்பம் லட்சுமி(70), தென்செட்டியந்தல் செங்கோடன் மகன் சீனிவாசன்(35), கந்தன்(60), இவரது மனைவி ஆராயி(55) ஆகிய 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 234 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Next Story