உளுந்தூர்பேட்டை அருகே அரசு கட்டிடத்தில் தீ விபத்து
உளுந்தூர்பேட்டை அருகே அரசு கட்டிடத்தில் தீ விபத்து பிளீச்சிங் பவுடர் மூட்டைகள் எரிந்து சேதம்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே பிடாகம் கிராம ஊராட்சிக்குட்பட்ட எலவனாசூர்கோட்டையில் திடக்கழிவு மேலாண்மை கட்டிடம் உள்ளது. இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வாங்கப்பட்ட ‘பிளீச்சிங் பவுடர்’ உள்ளிட்ட கிருமிநாசினி மூட்டைகள் இந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் உள்ளே இருந்த ‘பிளீச்சிங் பவுடர்’ மூட்டைகள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story