திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனாவுக்கு 18 பேர் பலி
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனாவுக்கு 18 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனாவுக்கு 18 பேர் பரிதாபமாக இறந்தனர்.
11 பேர் பலி
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நேற்று 164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 4,761 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு 11 பேர் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் நேற்று ஒரே நாளில் 701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 4,017 பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றின் காரணமாக நேற்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர்.
Related Tags :
Next Story