கொத்தமங்கலம், குளமங்கலத்தில் வீடுகளில் சித்துப் பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்


கொத்தமங்கலம், குளமங்கலத்தில் வீடுகளில் சித்துப் பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள்
x
தினத்தந்தி 23 May 2021 11:24 PM IST (Updated: 23 May 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

கொத்தமங்கலம், குளமங்கலத்தில் வீடுகளில் சித்துப் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் மற்றும் குளமங்கலம் வடக்கு மணிவர்ன மழைமாரியம்மன் கோவில்களில் வைகாசித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வரை விமரிசையாக கொண்டாடப்படும். அதிலும் கொத்தமங்கலத்தில் ஒரே நேரத்தில் வாழவந்த பிள்ளையார், பேச்சியம்மன், முத்துமாரியம்மன் சுவாமிகளுக்கு தேரோட்டமும் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா ஊரடங்கால் திருவிழாக்கள் நடத்த முடியவில்லை. இதனால் நேற்று கிராம மக்கள் அவரவர் வீடுகளில் சித்துப் பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்ய விழாக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. அதே போல கோவிலில் கூட்டம் கூடாமல் வீடுகளிலேயே பொங்கல் வைத்து படையல் வைத்து சாமியை வழிபட்டனர்.

Next Story