ரோட்டில் சென்ற கார் தீப்பிடித்தது


ரோட்டில் சென்ற கார் தீப்பிடித்தது
x
தினத்தந்தி 23 May 2021 11:27 PM IST (Updated: 23 May 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் ரோட்டில் சென்ற கார் தீப்பிடித்தது.

சிவகங்கை,

சிவகங்கை டி.புதூர் ஆக்ஸ்போர்டு நகரை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது62). இவர் சிவகங்கையில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து விட்டு தனது காரில் நேற்று வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார்.சிவகங்கை வாரச்சந்தை சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் முன் பக்கத்திலிருந்து திடீரென புகை வெளி வந்தது. இதை பார்த்ததும் காரை விட்டு ராஜசேகரன் இறங்கினார். சிறிது நேரத்துக்குள் என்ஜின் பகுதியில் தீப்பற்றியது. இதுபற்றி தகவலறிந்த சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர். கிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தனர். .இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story