பொதுமக்கள் காலில் விழுந்த அரசு அதிகாரி


பொதுமக்கள் காலில் விழுந்த அரசு அதிகாரி
x
தினத்தந்தி 23 May 2021 11:31 PM IST (Updated: 23 May 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முககவசம் அணிய வலியுறுத்தி அரசு அதிகாரி பொதுமக்கள் காலில் விழுந்தார்.

மணல்மேடு:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முககவசம் அணிய வலியுறுத்தி அரசு அதிகாரி, பொதுமக்கள் காலில் விழுந்தார். 
கால்களில் விழுந்து
கொரோனா பரவலை கட்டுப்படுத்த  தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு 7 நாட்களுக்கு அறிவித்துள்ளது. ேநற்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளித்ததால், மயிலாடுதுறை மாவட்டம்  மணல்மேடு பேரூராட்சியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூடினர்.அப்போது முககவசம் அணியாமல் கடைவீதிக்கு வந்த பொது மக்களை மணல்மேடு பேரூராட்சி பொது சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் சாமிநாதன் தடுத்து நிறுத்தி. முககவசத்தின் அவசியம் குறித்து அறிவுரைகள் வழங்கியும், அணியாமல் வந்தவர்களின் கால்களில் விழுந்தும் முககவசத்தை வழங்கி அணிந்து கொள்ள செய்தார்.
சமூக வலைதளம்
பொதுமக்களை பாதுகாத்திட முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், போலீஸ் துறையினர், சுகாதாரத்துறையினர், தூய்மை பணியாளர்கள், மற்றும் உள்ளாட்சித் துறையை சேர்ந்தவர் இரவு, பகலாக போராடி கொண்டிருக்கிறார்கள். எனவே தயவு செய்து கொரோனா வைரசை கட்டுப்படுத்த அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார். முக கவசம் அணிய வலியுறுத்தி பொதுமக்கள் காலில் விழுந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story