கரூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு 8 பேர் சாவு
கரூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு 8 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கரூர்
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 147 பேர் நேற்று குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். நேற்றைய நிலவரப்படி 2,203 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story