ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 23 May 2021 11:52 PM IST (Updated: 23 May 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கருங்கல்:
கருங்கல் அருகே மேல்மிடாலம் கைதவிளாகம் பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ பிரசாத். இவருடைய மனைவி பாத்திமா மேரி (வயது 35). இவர் மேல்மிடாலம் சந்திப்பில் துணிக்கடை நடத்தி வருகிறார். பாத்திமா மேரி நேற்று மாலை கருங்கல் பகுதிக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு ஸ்கூட்டரில் மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தாளையங்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது  பின்னால் ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தார். 
அந்த நபர் பாத்திமா மேரியின் ஸ்கூட்டரை நெருங்கி வந்து, அவரது கழுத்தில் கிடந்த 5¾ பவுன் தாலி சங்கிலியை பறித்தார். அப்போது சுதாரித்துக் கொண்ட பாத்திமா ேமரி கையால் தாலி சங்கிலியை பிடித்தார். இதில் தாலி சங்கிலி இரண்டு துண்டுகளாக அறுந்து 2¼ பவுன் இவரது கையில் சிக்கியது.  மீதமுள்ள 3½ பவுன் தங்க சங்கிலியுடன் மர்ம நபர் வேகமாக தப்பி சென்றான். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியது.


Next Story