சிதம்பரத்தில் ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’


சிதம்பரத்தில் ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 24 May 2021 12:04 AM IST (Updated: 24 May 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் பல்பொருள் அங்காடிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

சிதம்பரம், 


தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளது.

 இதையடுத்து மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளும் வகையில் நேற்று அனைத்து கடைகளையும் திறந்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்து இருந்தது.அந்த வகையில்  சிதம்பரம் நகர பகுதியில் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக கடைகளில் குவிந்தனர். 

500-க்கும் மேற்பட்டவர்கள்

 இந்த நிலையில் தெற்கு வீதி படித்துறை இறக்கம் அருகே உள்ள பல்பொருள் அங்காடி (பெரிய மால்) ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஒரே நேரத்தில் பொருட்கள் வாங்க 500-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

 இவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி திரண்டதுடன், தனிமனித இடைவெளி எதையும் பின்பற்றவில்லை. இதனால் இது கொரோனா சங்கிலி தொடர்போன்று பரவலுக்கு வித்திடும் நிலை ஏற்பட்டது. 

‘சீல்’ வைப்பு

 இதையடுத்து   சிதம்பரம் சப்-கலெக்டர் மது பாலன் உத்தரவின் பேரில்,  சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, நகராட்சி மேற்பார்வையாளர்கள் சுதாகர், காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் ஆகியோர் நேரில் சென்று, பல்பொருள் அங்காடிக்கு  ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், ‘சீல்’ வைத்தனர். 

இதேபோல் தெற்கு வீதியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்கும் ரூ.5000 அபராதம் விதித்தனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story