குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பு
காரியாபட்டி அருகே குடியிருப்புக்குள் பாம்பு புகுந்தது.
காரியாபட்டி,
திருச்சுழி அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்த சாரை பாம்பை பிடித்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யாநகர் பகுதியில் புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் அந்த வீட்டில் பதிப்பதற்காக வைத்துள்ள டைல்ஸ் கற்கள் பாக்கெட்டில் நல்லபாம்பு ஒன்று இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை அதிகாரி அந்தோணிசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story