கொரோனா பாதிப்பால் இதுவரை 31 பேர் பலி
சிவகாசி தாலுகாவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 31 பேர் பலியாகினர்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சிவகாசி தாலுகா பகுதியில் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரை தாலுகாவில் 67 ஆயிரம் பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிவகாசி அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் 7 தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான ஆக்சிஜனை மாவட்ட நிர்வாகம் வினியோகம் செய்து வந்த போதிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுவரை சிவகாசி தாலுகாவில் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்ட 31 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகாசி தாலுகாவில் 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் பலர் தடுப்பூசி போட ஆர்வமாக இருந்தபோதும் பல இடங்களில் போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. எனவே தேவைப்படும் தடுப்பூசிகளை அரசு வழங்கினால் மட்டுமே சிவகாசி பகுதியில் பரவி வரும் நோய் தொற்றை குறைக்க முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் சிவகாசி பகுதிக்கு தேவையான மருந்துகளையும், ஆக்சிஜனையும் வழங்க வேண்டும் என அரசுக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story