வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சோமரசம்பேட்டை,
சோமரசம்பேட்டை அருகே உள்ள சண்முகாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவரின் தந்தை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சேலத்தில் கொரோனா தொற்றால் இறந்துவிட்டார். அப்போது செந்தில்குமாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் அவர் ஒரு வாரத்தில் குணம் அடைந்தார். தனது தந்தை இறந்ததிலிருந்து மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார், இரவில் எழுந்து ‘அப்பா என்னை கூப்பிடுகிறார். நான் செல்கிறேன்’ என இரவில் அடிக்கடி கூறிவந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சேலத்தில் தனது அப்பாவிற்கு சாமி கும்பிட குடும்பத்துடன் சென்றார். பின்னர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருச்சி வந்த அவா், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story