கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போடுவதே பாதுகாப்பானது அரசு மருத்துவமனை டீன் வனிதா தகவல்
கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போடுவதே பாதுகாப்பானது. என்று அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
திருச்சி,
கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போடுவதே பாதுகாப்பானது. என்று அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறியதாவது:-
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதிலும், இறப்பை குறைப்பதிலும் தடுப்பூசி முக்கிய பங்குவகிக்கிறது. தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இதனால் எந்த தடுப்பூசி சிறந்தது என்று ஆராய்ச்சி செய்வதை நிறுத்திவிட்டு பொதுமக்கள் கிடைக்கின்ற கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்வதே பாதுகாப்பானது.
கொரோனா தொற்று ஏற்பட்டால் எதிர்ப்பு சக்தி அந்த வைரசை கொள்ளும். மேலும் அதிதீவிர நுரையீரல் தொற்று ஏற்படாமல் நம் உயிரை காக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், தடுப்பூசி போட்டு ஒவ்வாமை ஏற்பட்டவர்கள், நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தக்கூடாது.
உணவுக்கட்டுப்பாடு
தடுப்பூசி போட்டவர்களுக்கு உணவு கட்டுப்பாடு எதுவும் இல்லை, குறைந்தபட்சம் 3 நாட்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பும், பின்பும் மது அருந்தக்கூடாது, இதுபோல புகை பிடித்தலும் கூடாது. தடுப்பூசியின் விளைவாக காய்ச்சல், உடல் வலி, தலைவலி ஏற்படலாம் காய்ச்சல் மாத்திரை எடுத்துக் கொண்டு நன்றாக நீர் பருகி ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும்.
தடுப்பூசி ஒருவர் செலுத்தி இருந்தாலும் அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்வதன் மூலம் நாம் தீவிர தொற்று ஏற்பட்டு மரணம் அடையும் வாய்ப்பை குறைக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story