மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் காய்கறி விற்பனை- கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை மாவட்ட ஊரக பகுதிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படும் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை, மே:
நெல்லை மாவட்ட ஊரக பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படும் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
கட்டுப்பாட்டு அறை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட தீவிர முழு ஊரடங்கை தொடர்ந்து ஊரக பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு உதவிடும் வகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 யூனியன்களிலும் தலா ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மருத்துவ வசதிகளுக்கு தங்களது பகுதிகளுக்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். பாளையங்கோட்டை யூனியன் 0462-2572092, மானூர் 0462-2485123, அம்பை 04634-250397, சேரன்மாதேவி 04634-260131, பாப்பாக்குடி 04634-274540, நாங்குநேரி 04635-250229, களக்காடு 04635-265532, வள்ளியூர் 04637-220242, ராதாபுரம் 04637-254125 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
மகளிர் குழு காய்கறி விற்பனை
9 யூனியன்களில் 1,337 குக்கிராமங்களிலும் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகளை கண்காணிக்க பஞ்சாயத்து அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் குக்கிராமங்கள் அளவிலான கொரோனா கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு நோய் பரவல் குறைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story