ராயக்கோட்டை அருகே விபத்தில் மில் தொழிலாளி பலி - டிரைவருக்கு வலைவீச்சு


ராயக்கோட்டை அருகே விபத்தில் மில் தொழிலாளி பலி - டிரைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 May 2021 1:45 AM IST (Updated: 24 May 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே சரக்கு வேன் மோதிய விபத்தில் மில் தொழிலாளி பலியானார். சரக்கு வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்.

ராயக்கோட்டை,

ராயக்கோட்டை அருகே கருக்கனஅள்ளி ஊராட்சி பழையூர் கினியன்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32). தனியார் மில் தொழிலாளி. இவர்  நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக ஓசூர் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது தின்னூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, கெலமங்கலம் நோக்கி சரக்கு வேன் ஒன்று சக்திவேலின் மோட்டார்சைக்கிளுக்கு பின்னால்  அதிவேகமாக வந்தது. 

அந்த சமயம் சரக்கு வேன் டிரைவர் மோட்டார்சைக்கிளை முந்தி செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதையடுத்து பயத்தில் சரக்கு வேன் டிரைவர் அங்கிருந்து ஓடி விட்டார்.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சக்திவேலை அங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 
இந்த விபத்து குறித்து சக்திவேலின் மனைவி எல்லம்மா ராயக்கோட்டை போலீ்ஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரக்கு வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story