தொட்டியம் கடைவீதியில் அரசு அனுமதி அளித்தும் கடையை திறக்காத வியாபாரிகள்


தொட்டியம் கடைவீதியில் அரசு அனுமதி அளித்தும் கடையை திறக்காத வியாபாரிகள்
x
தினத்தந்தி 24 May 2021 1:48 AM IST (Updated: 24 May 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் கடைவீதியில் அரசு அனுமதி அளித்தும் வியாபாரிகள் கடையை திறக்கவில்லை.

தொட்டியம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் இன்று முதல் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இதன்காரணமாக நேற்று இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் இயங்கலாம் என அறிவித்திருந்தது. ஆனால் திருச்சி மாவட்டம் தொட்டியம் கடைவீதியில் நேற்று பெரும்பாலான கடைகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறும்போது, ஒரு நாள் கடைகள் திறக்க அனுமதி என்ற அறிவிப்பு வந்த உடனேயே இப்பகுதியில் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தது. ஆனால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் இப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் நாங்கள் கடையை ஒரு நாள் திறந்து வைத்து இதனால் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் தான் என்றார். மேலும் தொட்டியம் கடைவீதியில் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம், கூட்டமாக சென்றது, கொரோனா பரவலை அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

Next Story