கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் பலி புதிதாக 720 பேருக்கு பாதிப்பு உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் பலியானார்கள். புதிதாக 720 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
கடலூர்,
720 பேருக்கு பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 42 ஆயிரத்து 827பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில், புதிதாக 720பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் பெங்களூரு, காஞ்சீபுரம், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, விருத்தாசலம் ஆகிய இடங்களுக்கு வந்த 4 பேருக்கும், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த2 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 59பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 655 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 34 ஆயிரத்து 818 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றிருந்தனர். நேற்று ஒரே நாளில் 313 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நேற்று முன்தினம் வரை 435 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்நிலையில் நேற்று 8 பேர் பலியாகியுள்ளனர்.
இதன் விவரம் வருமாறு:-
8 பேர் பலி
நல்லூரைச் சேர்ந்த 47 வயது ஆண், சிதம்பரத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 65 வயது முதியவர், குமராட்சியை சேர்ந்த 55 வயது ஆண் ஆகிய 4 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பண்ருட்டியை சேர்ந்த 55 வயது ஆண் சென்னை அரசு மருத்துவமனையிலும், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 52 வயது ஆண் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 52 வயது ஆண் கடலூர் அரசு மருத்துவமனையிலும், கடலூரைச் சேர்ந்த 82 வயது முதியவர் சென்னை தனியார் மருத்துவமனையிலும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 443 ஆக உயர்ந்தது. கொரோனா பாதித்த 6670 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 983 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாவட்டத்தில் கட்டுப்பாட்டுப் பகுதி 98 ஆக உள்ளது.
Related Tags :
Next Story