தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம்
தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம்
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய 60 துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான பலசரக்கு மற்றும் காய்கறிகள் நிவாரணப் பொருட்களை சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா வழங்கினார். தலைமை காவலர் கவிதா வரவேற்றார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார் ஆகியோர் தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடும் பொழுது கண்டிப்பாக முகக் கவசம் அணியவேண்டும், கையுறை அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார்கள். பேரூராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் திலீபன் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story