பாப்பாரப்பட்டி அருகே தகராறில் படுகாயம் அடைந்த கட்டிட மேஸ்திரி சாவு


பாப்பாரப்பட்டி அருகே தகராறில் படுகாயம் அடைந்த கட்டிட மேஸ்திரி சாவு
x
தினத்தந்தி 24 May 2021 2:17 AM IST (Updated: 24 May 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே தகராறில் படுகாயம் அடைந்த கட்டிட மேஸ்திரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி அருகே உள்ள கடகத்தூரை சேர்ந்த பெரிய குப்பன் என்பவரது மகன் ராமசாமி (வயது 38). கட்டிட ேமஸ்திரி. இவருக்கும், பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேப்பிலைஅள்ளி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் லாரி டிரைவரான ரமேஷ் (32) என்பவருக்கும் குடும்ப சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வேப்பிலை அள்ளியில் சமீபத்தில் இறந்த உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராமசாமி வந்தார். 

அப்போது அங்கு வந்த ரமேஷ் முன்விரோதத்தில் உருட்டுக்கட்டையால் ராமசாமியை தாக்கி கீழே தள்ளி அவரது தலையில் கல்லைத் தூக்கி போட்டார். இதில் படுகாயமடைந்த ராமசாமி சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் ரமேசை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  தற்போது ராமசாமி ஆஸ்பத்திரியில் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story