பந்தலூர் அருகே கொரோனா விதியை மீறிய 2 பேர் மீது போலீசில் புகார்


பந்தலூர் அருகே கொரோனா விதியை மீறிய 2 பேர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 24 May 2021 2:17 AM IST (Updated: 24 May 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே கொரோனா விதியை மீறிய 2 பேர் மீது போலீஸ் நிலையத்தில் வருவாய்த்துறையினர் புகார் அளித்தனர்.

பந்தலூர்,

பந்தலூர் அருகே உள்ள அட்டி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதிக்கு செல்லும் சாலை மூடப்பட்டு, யாரும் வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

ஆனால் அதை மீறி அங்குள்ள ஒரு பெண்ணும், தனிமைப்படுத்தப்பட்ட ஒரு ஆணும் வெளியே சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேவாலா போலீஸ் நிலையத்தில் வருவாய்த்துறையினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோன்று கொளப்பள்ளி பஜாரில் கொரோனா பாதித்த வியாபாரிகளில் ஒருவர், மேப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அங்குள்ள கடைகள் நேற்று 10-வது நாளாக அடைக்கப்பட்டு இருந்தது.

Next Story