நெல்லை, கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும்- ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்


நெல்லை, கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும்-  ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 May 2021 2:33 AM IST (Updated: 24 May 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும் என ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

நெல்லை, மே:
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்த்தன், சுகாதாரத்துறை இணை செயலாளர் நிபுன் விநாயக் ஆகியோருக்கு நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் கோரிக்கை குறித்து கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை நாடாளுமன்ற தொகுதி முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைக்காக நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஞானதிரவியம் எம்.பி. நேரில் சந்தித்து இதுதொடர்பாக நெல்லை மாவட்ட மக்களின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story