கொரோனா விதிகளை மீறியவர்களிடம் ரூ.75 லட்சம் அபராதம் வசூல்
கொரோனா விதிகளை மீறியவர்களிடம் ரூ.75 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் நேற்று ஊட்டியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை மறந்து மக்கள் பொருட்களை வாங்கினர்.
ஊட்டி நகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உழவர் சந்தை, நகராட்சி மார்க்கெட் மற்றும் வெளிப்புற கடைகளில் கொரோனா விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி கடந்த 10 நாட்களில் முககவசம் அணியாத நபர்களுக்கு தலா ரூ.200, சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைகளுக்கு ரூ.500 என மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா விதிகளை மீறியதாக தனிநபர்கள், கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரியில் இதுவரை ரூ.75 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story