கூடலூர் அருகே கஞ்சா வைத்திருந்த ஆட்டோ டிரைவர் கைது


கூடலூர் அருகே கஞ்சா வைத்திருந்த ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 24 May 2021 2:35 AM IST (Updated: 24 May 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே கஞ்சா வைத்திருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பந்தலூர்,

கூடலூர் அருகே நாடுகாணி பகுதியில் தேவாலா சப்-இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனையிட்டனர். அதில் 700 கிராம் கஞ்சா இருந்தது. 

இது தொடர்பாக ஆட்டோவை ஓட்டி வந்த சாந்தகுமார்(வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆட்டோ மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story